உள்ளூர் செய்திகள்

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி, செப். 18-லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நிகழ்ந்த சந்திப்பை, தமிழக, பா.ஜ.,வின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மிகவும் இழிவாக பேசியதை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மாவட்ட, காங்., சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., - எம்.பி., கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் லலித்ஆண்டனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !