மேலும் செய்திகள்
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
08-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து நீர்வரத்து சரிந்தும், அதிகரித்தும் இருக்கும். கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தில் மழை பெய்யாததால், தற்போது கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், 733 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 607 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 422 கன அடி, இடது மற்றும் வலதுபுற வாய்க்கால்களில் பாசனத்திற்கு, 185 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.60 அடியாக நீர்மட்டம் இருந்தது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 125 கன அடி நீர் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை பாம்பாறு அணை மற்றும் சூளகிரி சின்னாறு அணைக்கு, நீர்வரத்தும் இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை.
08-Aug-2024