உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகம் அருகில், தமிழக விவசா-யிகள் சங்கம் சார்பில், நேற்று உழவர் தின பேரணி நடந்தது.சேலம் சாலை வழியாக புறப்பட்ட பேரணி, ரவுண்டானா அருகில் முடிந்தது. அங்கு மாலை, 6:30 மணிக்கு பொதுக்-கூட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் நரசிம்மநாயுடு, கர்நாடகா விவசாய சங்க தலைவர் குருபூர்சாந்தகுமார் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு போகத்திற்கும் உற்பத்தி மானியம் பண-மாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு, மத்திய அரசு தேசிய வங்கி கடன்களையும், தமிழக அரசு கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காட்டுப் பன்றியை சுட விவசாயிக-ளுக்கு துப்பாக்கியும், பயிற்சியும், அனுமதியும் வழங்க வேண்டும்.அரசு செலவில் விவசாய பணிகளுக்கு இயந்திரங்கள் வழங்க வேண்டும். விவசாய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்து, ஏற்றுமதி தடையை நீக்கி, அனைத்து விவசாய பொருட்களையும், ஏற்றுமதி செய்ய வேண்டும். விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு, 15 நாட்க-ளுக்குள் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்பட்ட உயிர்-சேதத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்-ளிட்ட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை