உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூதாட்டியிடம் நகை, பணம் மோசடி

மூதாட்டியிடம் நகை, பணம் மோசடி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரக்கரை அருகே ஒசட்டியை சேர்ந்தவர் மாதப்பா மனைவி ஜெயம்மா, 65, கூலித்தொழிலாளி; இவர் தனக்கு பழக்கமான தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த நகை பாலீஸ் போடும் தொழில் செய்யும் கார்த்திக், 39, என்பவரிடம் மூன்று ஆண்டுக்கு முன் தனது, 8 பவுன் நகையை கொடுத்து அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு கட்டி கொடுக்கமாறு கேட்டார்.அதேபோல் நகையை அடகு வைத்து கிடைத்த பணத்தை வைத்து, கார்த்திக் வீட்டையும் கட்டி கொடுத்துள்ளார். அதன் பின் நகையை மீட்டு தருமாறு கூறி, 2 லட்சம் ரூபாயை ஜெயம்மா, கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்ற அவர், நகையை மீட்டு கொடுக்காமல் மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வந்தார். தேன்கனிக்கோட்டை போலீசில் ஜெயம்மா நேற்று கொடுத்த புகார்படி, மோசடி வழக்குப்பதிந்து கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்