மேலும் செய்திகள்
தனியார் ஊழியரிடம் ரூ.12.98 லட்சம் மோசடி
16-Aug-2024
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரியை சேர்ந்தவர் வினித், 49; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் போனுக்கு வந்த தகவலில், 'யு டியூப்'பில் வரும் வீடியோக்களுக்கு, 'லைக்' செய்யும் பணி என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் இருந்தது. நம்பிய வினித், வீடியோக்களை, 'லைக்' செய்தார்.இதனால், அவரது வங்கி கணக்கிற்கு சிறிய அளவில் பணம் வந்தது. தொடர்ந்து, அவர்கள் முதலீடு செய்ய கூறிய வெவ்வேறு வங்கி கணக்கிற்கு, 11.35 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின்னர் எந்த பணமும் வரவில்லை. சந்தேகமடைந்த வினித், அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினித், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Aug-2024