உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்

விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்

ஓசூர்: சூளகிரி அருகே சப்படி முனீஸ்வர் நகரில், 50 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. இதற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்துள்ளனர். அதை சாப்பிட்ட நாய்களில், 10க்கும் மேற்பட்டவை நேற்று பலியா-கின. உயிருக்கு போராடிய சில நாய்களை மீட்ட பொதுமக்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். உயிரிழந்த நாய்களை அப்பகுதியில் மக்கள் அடக்கம் செய்தனர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை