உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்ட நிறுவனங்கள், வீடுகளுக்கு ரூ.1.65 லட்சம் அபராதம்

ஓசூரில் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்ட நிறுவனங்கள், வீடுகளுக்கு ரூ.1.65 லட்சம் அபராதம்

ஓசூர்: ஓசூரில், டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட, தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு மொத்தம், 1.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால், தமிழக எல்லையான ஓசூர் மாநகராட்சியில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலை, அங்கன்வாடி மையம், 75க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் 130க்கும் மேற்பட்ட பழைய பொருட்கள் குடோன்களில் டெங்கு கொசு புழுக்கள் ஒழிப்பு பணி மேற்-கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்-பட்ட, 500 தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுக-ளுக்கு மொத்தம், 1.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்-ளது.டெங்கு கொசுக்களை ஒழிக்க, அனைத்து பகுதி களிலும் புகை மருந்து அடிக்கப்படுகிறது. கட்டட கூரைகள், நீர் தொட்டிகள், குடங்கள், பேரல்கள், பழைய பூந்தொட்டிகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், குளிர்சாதன பெட்டி பின்-புறம் தேங்கியுள்ள நீர், மூடப்படாத சின்டெக்ஸ் தொட்டிகள், புதிய கட்டுமானம் நடக்கும் இடங்கள் போன்ற இடங்களில், தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள் கடைகள் அல்லது வீடுகளில் கொசு புழு உற்-பத்தி கண்டறியப்பட்டால், மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி