உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வாலிபரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி

ஓசூர் வாலிபரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சித்தனப்பள்ளி, விஷ்ணு ஆனந்தம் கேலக்சி லே அவுட்டில் வசிப்பவர் ரமேஷ், 30. இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு 'லிங்க்' வந்தது. 'கிளிக்' செய்து உள்ளே சென்ற போது, ஹோட்டல்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டது. அதை உண்மை என நம்பிய ரமேஷ், சில ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்தபோது பணம் கிடைத்தது.மீண்டும் லிங்கில், பணம் டிபாசிட் செய்தால், ஊதியத்துடன் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. இதை நம்பி, பல தவணைகளாக ஒரு வங்கி கணக்குக்கு, 5.57 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். அதன் பின், அவருக்கு பணம் வரவில்லை.ரமேஷ் புகாரின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ