மேலும் செய்திகள்
காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!
04-Feb-2025
கிருஷ்ணகிரி: மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இறுதி வரை, அ.தி.மு.க.,வில்தான் இருப்பார் என்ற நம்பிக்கை உள்-ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் அ.தி.மு.க., கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலர் தங்க-முத்து தலைமையில், திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பங்கேற்ற துணை பொதுச்செயலர் முனுசாமி வீடு, வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து, பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை) மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.பின், நிருபர்களிடம் முனுசாமி கூறியதாவது:அ.தி.மு.க.,வில் சில துரோகிகள் உள்ளனர். அவர்களது முகத்தி-ரையை கிழிப்போம் என, செங்கோட்டையன் பேசியுள்ளார். பத-விக்காக, கட்சியினர் சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்களை கண்டிப்பதற்காக கூறியிருக்கலாம். அவர், அ.தி.மு.க.,வில் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவருக்கு தளபதியாக இருந்தவர். பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவருக்கு உழைப்புக்கேற்ற பல்வேறு பதவிகளும் வழங்கப்பட்-டன. தற்போதைய பொதுச்செயலர் இ.பி.எஸ்., அதே மரியாதை-யோடு அவரை நடத்தி வருகிறார்.கட்சிக்கு இடர்பாடு வரும்போது, அதே மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, துரோகம் செய்து விட்டு தி.மு.க.,வில் சேர்ந்து அமைச்சராகி உள்ளார். ஆனால், செங்கோட்டையன் அப்படிபட்-டவர் அல்ல. அவர் இறுதி வரை, அ.தி.மு.க.,வில் தான் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.அ.தி.மு.க.,வில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என, ஓ.பி.எஸ்., கூறுகிறார். அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார். தேர்தலில் எதிர்த்து நின்று போட்டி போடுகிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபடுகிறார். கட்சியால் பதவி, பெயர் பெற்றவ-ருக்கு ஏன் இந்த இரட்டை நிலை, இரட்டை நாக்கு என்பது தெரி-யவில்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும், விசாரணை நடந்-தாலும் இறுதியில், இ.பி.எஸ்., தரப்பில் தான், அ.தி.மு.க., இருக்கும் என்பது உறுதி.அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பது குறித்து தினகரன் கூற தேவையில்லை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளார். எதிர்க்கட்சி-யாக விமர்சிக்கலாமே தவிர, அ.தி.மு.க., பிரச்னை குறித்து விமர்-சிக்க அவருக்கு தகுதியில்லை. செங்கோட்டையன் கேட்காம-லேயே, அவரது வீட்டுக்கு, தி.மு.க., அரசு போலீஸ் பாதுகாப்பு போட்டு, எப்படியாவது கட்சியை உடைக்கலாம் என திட்டம் போடுகிறது. ஒற்றுமையை குலைக்க நாடகம் ஆடுகிறது.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறைக்குள், மூன்றாம் நபர் ரகசிய கேமரா வைத்து கண்கா-ணிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளர்கள், அரசு செயல்பாடுகள் உரிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இல்லாமல், மூன்றாவது நபர்களிடத்தில் செயல்படுகிறது என்ப-தற்கு இதுவே உதாரணம்.இவ்வாறு கூறினார்.
04-Feb-2025