உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாராயம் விற்ற மகன் பெற்றோருடன் கைது

சாராயம் விற்ற மகன் பெற்றோருடன் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே கோம்பைகாடு மலை கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், கள்ளச்சாராயம் விற்ற, அப்பகுதியை சேர்ந்த புத்திரி, 54, அவர் மனைவி கோவிந்தம்மாள், 47, மகன் அய்யன், 29, ஆகிய, 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த, 7 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ