உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு

கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதலாமாண்டு கால்பந்தாட்ட கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில், 255 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி கால்பந்தாட்ட குழு மற்றும் கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சார்பில், முதலாமாண்டு இலவச கால்பந்தாட்ட கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த மாதம், 20ல் தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச பயிற்சி முகாமில், 6 வயது முதல், 17 வயது வரை உள்ள, 255 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தினமும் காலை உணவுடன், 6:00 முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:30 முதல், 6:00 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கால்பந்தாட்ட பயிற்சி நிறைவு விழா நடந்தது. கால்பந்தாட்ட குழு தலைவர் வழக்கறிஞர் மதியழகன் தலைமை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் நவாப், அரிமா சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்பந்தாட்ட பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ