உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொல்லை கொடுத்த ரவுடி கைது

தொல்லை கொடுத்த ரவுடி கைது

ஓசூர் : ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், தின்னுார் குழந்தைகள் பூங்கா அருகே ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதுடன், 'சாலையில் செல்லும் அரசு வாகனங்களை அடித்து நொறுக்குவேன். பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்துவேன்' என ஒருவர் மிரட்டினார். அவரை பிடித்து விசாரித்தபோது, ஓசூர் அய்யாசாமி பிள்ளை தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பிரபல ரவுடியான சாம்ராட், 36, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஓசூர் டவுன், ஹட்கோ ஸ்டேஷனில் தலா ஒரு கொலை வழக்கு உள்ளது. போலீசார் குற்ற சரித்திர பதிவேட்டில், இவரது பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்