உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது

டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நிர்மல், 27 மற்றும் விக்னேஷ், 30. காவேரிப்பட்டணம், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை நடத்துகின்றனர். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு குடிபோதையில் சிலர் டூ-வீலர்களில் வந்து, பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சிகரெட் வாங்கினர். அங்கிருந்து செல்ல முயன்றவர்களிடம், டீக்கடையில் இருந்த நிர்மல், பணம் கேட்டார்.மதுபோதையில் இருந்த அவர்கள், 'எங்களிடமே காசு கேட்கிறாயா, நாங்கள் யாரென்று தெரியுமா' எனக்கேட்டு நிர்மல், விக்னேஷை சரமாரியாக தாக்கினர். டீக்கடையில் இருந்த பாட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தினர்.படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும், காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், அவர்களை தாக்கியது வி.சி., கட்சியினர் என தெரிந்தது. இதையடுத்து, காவேரிப்பட்டணம் காந்தி நகர் விஷ்வா, 20, மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை