உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு

அ.தி.மு.க., பொதுச்செயலாளர்இ.பி.எஸ்.,க்கு வரவேற்புபோச்சம்பள்ளி, திருப்பத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., ரமேஷ் கடந்த, 15 இரவு உடல்நிலை குறைவால் மரணமடைந்தார். அவரின் சொந்த ஊரான திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரையிலுள்ள வீட்டில் அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கார் மூலம் தர்மபுரி, போச்சம்பள்ளி, மத்துார் வழியாக திருப்பத்துார் சென்றார். காலை, 10:30 மணிக்கு போச்சம்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ரவிச்சந்திரன், துாயமணி மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். அதேபோல் மத்துார் பஸ் ஸ்டாண்டில் ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராஜ் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் இ.பி.எஸ்.,ஐ வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ