உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாப் மாநில அளவில் சாதிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்

13 ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாப் மாநில அளவில் சாதிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர்: தமிழக அளவில் நவ., மாதத்திற்கான ரேங்கிங் பட்டியலில், முதல், 10 இடங்களுக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தில் மலை பகுதிகளிலுள்ள நகர்புற, மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில், உள், புற நேயா-ளிகளுக்கான சிகிச்சை, லேப் பரிசோதனை, பிரசவம், சர்க்கரை, ரத்த அழுத்தம் கண்டறிதல், புற்றுநோய் கண்டறிதல் போன்ற மொத்தம், 18 வகையான செயல்பாடுகள் கணக்கிடப்பட்டு, ஒவ்-வொரு மாதமும் தமிழக அரசு தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கி, அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த நவ., மாதத்திற்கான பட்டியலில், கிருஷ்ணகிரி மாவட்-டத்தில், ஓசூர் மாநகராட்சிக்குள் உள்ள ஓசூர் சீத்தாராம்நகர் நகர்-புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநில அளவில், 2ம் இடம் பெற்-றுள்ளது. அதேபோல், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாவு நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநில அளவில், 3ம் இடமும், ஆவலப்பள்ளி, 4ம் இடமும், மூக்கண்டப்பள்ளி, 5வது இடமும் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்த, 4 நகர்புற சுகாதார நிலையங்கள், மாநில அளவிலான ரேங்கிங் பட்டியலில், முதல், 10 இடங்களுக்குள் வந்து விடுகின்றன.அதேபோல், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை-யங்கள் ரேங்கிங் பட்டியலில், கெலமங்கலம் முதலிடம் பெற்றுள்-ளது. கடந்த, 11 மாதங்களில், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்-பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 7 முறை முதலிடத்தை பிடித்-துள்ளது. சூளகிரி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மாநில அளவில், 5வது இடத்திலும், ஓசூர் அருகே பாகலுார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 6வது இடத்திலும், அஞ்செட்டி, 8வது இடத்திலும் உள்ளன. தளி, 13வது இடத்திலும், சூளகிரி அருகே காமன்தொட்டி, 14வது இடத்திலும், கிருஷ்ணகிரி அருகே எம்.சி., பள்ளி, 16வது இடத்-திலும் உள்ளன. கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டி-யலில், சூளகிரி அருகே பேரிகை மாநில அளவில் முதலிடத்-திலும், அத்திமுகம், 2வது இடத்திலும், மதகொண்டப்பள்ளி, 4வது இடத்திலும், கக்கதாசம், 5வது இடத்திலும், உனிசெட்டி, 9வது இடத்திலும் உள்ளன.ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில், 11வது இடத்திலும், பாலதொட்ட-னப்பள்ளி, 12, மத்திகிரி, 14, ராயக்கோட்டை, 16, கும்ளாபுரம், 18, முத்தாலி, 19, உத்தனப்பள்ளி, 21, உரிகம், 23, நாகமங்கலம், 29, தொரப்பள்ளி, 33, உள்ளுகுறுக்கி, 38, கொத்தகொண்டப்-பள்ளி, 41, பேகேப்பள்ளி, 60, தடிக்கல், 66வது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி