உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 15 பவுன் நகை திருட்டு: துாய்மை பணியாளரிடம் விசாரணை

15 பவுன் நகை திருட்டு: துாய்மை பணியாளரிடம் விசாரணை

ஓசூர்: ஓசூரில், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவரின் தாயின் நகையை திருடிய துாய்மை பணியாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ்; பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர்; இவரது தாய் ஜெயம்மா, 85, நேற்று காலை தனது, 15 பவுன் நகையை கழற்றி சுருக்கு பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். அப்போது, மாநகராட்சியில் தனியார் துாய்மை பணியாளராக வேலை செய்யும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆண் ஒருவர், தனது மனைவி மற்றும் மகனுடன் குப்பை சேகரிக்க ஜெயம்மா வீட்டிற்கு சென்றார். குப்பையை கொண்டு வந்து வெளியே கொடுத்த போது, ஜெயம்மாவிடம் இருந்த சுருக்கு பை கீழே விழுந்தது. இதை அவர் கவனிக்காமல் வீட்டிற்குள் சென்றார்.ஆனால், சுருக்கு பை கீழே விழுவதை கவனித்த துாய்மை பணியாளர், குப்பையுடன் சுருக்கு பையையும் எடுத்து சென்றார். சிறிது நேரத்தில் நகை இருந்த சுருக்கு பையை காணாததால், தனது மகன் நாகராஜிற்கு ஜெயம்மா தகவல் கொடுத்தார். அவர் வந்து வீட்டில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, துாய்மை பணியாளர் நகையை எடுத்து சென்றது தெரிந்தது. ஓசூர் டவுன் போலீசாரை அழைத்து சென்று விசாரித்த போது, முதலில் நகையை எடுக்கவில்லை என கூறியவர், தொடர்ந்து விசாரித்த போது நகையை எடுத்ததை ஒப்பு கொண்டு திரும்பி கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்