உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.72 லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைது

ரூ.1.72 லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைது

ஓசூர், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மகேந்திரா மராஸ்சோ காரில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது.இதனால் காரை ஓட்டி வந்த, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சந்தைபேட்டையை சேர்ந்த திருசெந்தில், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கார் மற்றும் 1.56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 232 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 3,135 ரூபாய் மதிப்புள்ள, 30 கர்நாடகா மதுபான பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கார் உரிமையாளரான கரூர் அருகே மாயனுாரை சேர்ந்த சந்திரமோகன் மற்றும் ஓசூரை சேர்ந்த புரோக்கர் முருகேசன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல், கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாயக்கண்ணன் மற்றும் போலீசார், பாரந்துார் சாலையில் நடத்திய வாகன சோதனையில், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியிலிருந்து, ராயக்கோட்டைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில் கடத்தி சென்ற, தேன்கனிக்கோட்டை அடுத்த பாளையம்கோட்டா பகுதியை சேர்ந்த அபுசலீசா, 24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 16,720 ரூபாய் மதிப்புள்ள, 17 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை