உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணம் அருகே 2 குடிசை வீடு எரிந்து நாசம்

காவேரிப்பட்டணம் அருகே 2 குடிசை வீடு எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே, 2 குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்ததில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி நாசமானது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஹள்ளி பஞ்.,க்குட்பட்ட போத்தாபுரம் ஜவான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாரியப்பன், 40. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முருகேசன், 32. இவர்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் வீடுகளை பூட்டி விட்டு, மாரியப்பன், முருகேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்றனர். காலை, 8:30 மணியளவில், 2 பேரின் குடிசை வீடுகளில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. சிறிது நேரத்தில் வீடுகள் தீப்பற்றி எரிய தொடங்கின. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ மளமளவென பரவி முற்றிலும் எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் 2 வீடுகளில் இருந்த கட்டில், துணிகள், சமையல் பாத்திரங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், குடிசை வீட்டின் மேல் செல்லும் மின்சார ஒயர் மூலம், தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !