உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிம வளம் மற்றும் புவியியலாளர் பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் குருபரப்பள்ளி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி பெட்ரோல் பங்க் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், ஒன்றரை யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. வேப்பனஹள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.* பேரிகை வி.ஏ.ஓ., ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சொன்னேபுரம் ரிங்ரோடு ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம், அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி சீட்டின்றி, 11 டன் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவரான பெலத்துார் ஜீவா நகரை சேர்ந்த பூபாலன், 35, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை