உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஓசூர் : கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனுார் அருகே காளநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56, விவசாயி; நேற்று காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மோட்டார் அறையில் இருந்து இருவர், ஒயரை திருடி கொண்டு தப்பியோடினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து, கெலமங்கலம் போலீசில் ராமகிருஷ்ணன் ஒப்படைத்தார். விசாரணையில், பொம்மதாதனுார் அருகே இருளப்பட்டியை சேர்ந்த கணேஷ், 21, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 5,000 ரூபாய் மதிப்புள்ள, 15 மீட்டர் மின்மோட்டார் ஒயரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ