மேலும் செய்திகள்
ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்
13-Sep-2024
மண் கடத்திய 2 பேர் கைதுஓசூர், செப். 29-ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளியில், தேன்கனிக்கோட்டை சாலையோரமுள்ள ஏரியில் இருந்து, பேலகொண்டப்பள்ளி கிராமத்திற்கு கள்ளத்தனமாக மண் அள்ளப்படுவதாக, மத்திகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், 15,000 ரூபாய் மதிப்புள்ள, 4 யூனிட் மண்ணுடன் நின்றிருந்த டிப்பர் லாரி மற்றும் ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த போட்டோகிராபர் சங்கர், 42, தேன்கனிக்கோட்டை அருகே இருதாளத்தை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார், 39, ஆகிய, 2 பேரை கைது செய்தனர். டிப்பர் லாரி டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
13-Sep-2024