கிருஷ்ணகிரி அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு, 2ம் கட்ட கலந்-தாய்வு விபரம் www.gacmenkrishnagiri.org இன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 9) முதல் 12ம் தேதி வரை, 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இன்று பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு, 11ம் தேதி, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியல் ஆகிய பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 12ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்-கிலம் பாடப்பிரிவுகள் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் விண்-ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை பட்டி-யலில் இடம் பெற்ற மாணவர்களின், மின்னஞ்சல் மற்றும் வாட்-ஸாப்பில், கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் அனுப்-பப்பட்டுள்ளது.கலந்தாய்வின் போது, விண்ணப்பம், டி.சி., மதிப்பெண் பட்டி-யல்கள், ஜாதி, வருமான சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய-வற்றின் அசல் மற்றும் 3 ஜெராக்ஸ், 4 பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக கலை பிரிவுக்கு, 2,905 ரூபாய், அறிவியல் பாடப்பிரிவுக்கு, 2,925 ரூபாய், கணினி அறிவியல் பிரிவுக்கு, 2,025 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்-வாறு, அதில் தெரிவித்துள்ளார்.