உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடகா மதுபானம் கடத்திய 3 பேர் கைது

கர்நாடகா மதுபானம் கடத்திய 3 பேர் கைது

தளி, தளி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார், தமிழக எல்லையான கும்ளாபுரம் சோதனைச்சாவடியில், நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஆல்டோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க கடத்தி செல்வது தெரிந்தது.இதனால் காரில் வந்த, தேன்கனிக்கோட்டை அருகே பஞ்சேஸ்புரம் காந்தி நகரை சேர்ந்த ஜெய்சிம்மா, 36, டிரைவர் முனிகிருஷ்ணன், 32, சாரகப்பள்ளி அருகே வனமங்கலம் கிராமத்தை சேர்ந்த திம்மராஜ், 37, ஆகிய, 3 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 32,000 ரூபாய் மதிப்புள்ள, 336 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை