மேலும் செய்திகள்
மணல், கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
27-May-2025
ஓசூர், ஓசூர், ஜூஜூவாடி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 12 யூனிட் மண்ணை, கர்நாடகாவிற்கு கடத்தியது தெரிந்தது. அதேபோல், ஓசூர் சாலையிலுள்ள ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே, வி.ஏ.ஓ., ஜெகதீஷ் மற்றும் குழுவினர் நடத்திய வாகன சோதனையில், 1.6 யூனிட் எம்.சாண்ட் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.* ஜெகதேவிபாளையம் வி.ஏ.ஓ., தீபா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம், திருவண்ணாமலை சாலை, ஜிட்டோபனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கல் கடத்த முயன்றது தெரிந்தது. பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.அதேபோல வேலம்பட்டி அருகே காணான்குட்டை ஏரி அருகே நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. மாரிசெட்டிஹள்ளி வி.ஏ.ஓ., வேடியம்மாள் புகார் படி நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-May-2025