உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்களால், தந்தை, மகன் உட்பட மூன்று பேர் பலியாகினர். ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மாலை, 4:30 மணிக்கு, லாரி, கார், பைக், பிக்கப் வாகனம் என, 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்களில் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். குருபரப்பள்ளி போலீசாரும் விரைந்தனர்.விபத்தில், பைக்கில் சென்ற பர்கூர், தபால்மேடு பகுதி எலக்ட்ரீஷியன் அன்வர்பாஷா, 30, அவரது மகன் அமீம், 7, கிருஷ்ணகிரி, பெரியார் நகர் பர்கத்துல்லா, 65, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

விபத்து நிகழ்ந்தது எப்படி?

கர்நாடகா மாநிலம், தும்கூரில் இருந்து திருவண்ணாமலைக்கு, 25 டன் மைதா லோடு ஏற்றிய லாரி வந்தது. குருபரப்பள்ளியில் சாலையை பெயர்த்தெடுத்து புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், வாகனங்கள் மெதுவாக சென்றன.அப்போது மைதா லோடு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்ற பைக், இரு கார்கள் மற்றும் தனியார் கூரியர் நிறுவன லாரி மீது மோதியதில் கூரியர் நிறுவன லாரி, மீடியனில் கவிழ்ந்ததுடன், முன்னால் நின்ற அரசு பஸ் மீது மோதியது. அரசு பஸ் அதற்கு முன் நின்ற சரக்கு வாகனங்கள் மீது மோத, சங்கிலி தொடராக விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை