உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.ஜி.ஆர்., 37ம் ஆண்டு நினைவு நாள்

எம்.ஜி.ஆர்., 37ம் ஆண்டு நினைவு நாள்

எம்.ஜி.ஆர்., 37ம் ஆண்டு நினைவு நாள்தர்மபுரி, டிச. 25-தர்மபுரி, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 37ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நகர செயலாளர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கும், பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க, சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நல்லதம்பி, நகர செயலாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடத்துாரில் ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் நகர செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* அரூர் பஸ் ஸ்டாண்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட, பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார், உள்பட பல்வேறு இடங்களில், எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ