உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஓசூர்: சூளகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., தவமணி மற்றும் போலீசார், சூளகிரியில் உள்ள பழைய கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த, 3 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது தலா, 60,000 ரூபாய் மதிப்புள்ள, கிரானைட் கல் கடத்தியது தெரிந்தது. இதனால், கிரானைட் கற்க-ளுடன், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, தப்பிய லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் போலீசார், ஓசூர் - தேன்க-னிக்கோட்டை சாலையில், நாகொண்டப்பள்ளி அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, 5 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை