உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த நாயக்கனுாரை சேர்ந்தவர் வெங்க-டேசன், 56, ஊர் தலைவர். அதே பகுதியை சேர்ந்-தவர் சின்னசாமி, 50, விவசாயி. இவரின் மகன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்-துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ஊர் பெரி-யவர்கள் சமரசம் பேசும் போது, வெங்கடேசன் கலந்து கொள்ளவில்லை. மேலும் சின்னசாமி குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் தரக்குறை-வாக பேசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசாமி தரப்பினர், நேற்று முன்தினம் வெங்க-டேசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றனர்.வெங்கடேசன் அளித்த புகார் படி சின்னசாமி, அவரது தம்பி சேகர், 32, சென்றாயன், 29, ஆகிய மூவர் மீதும், கந்திகுப்பம் போலீசார் வழக்குப்ப-திந்தனர். அதேபோல சேகர் அளித்த புகார் படி வெங்கடேசன் அவரது மகன் நவீன், 19, ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்