உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு இடங்களில் மாணவி உட்பட 5 பேர் மாயம்

வெவ்வேறு இடங்களில் மாணவி உட்பட 5 பேர் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், மாணவி உட்பட, 5 பேர் மாயமாகினர்.ஓசூர் அருகே, ஒன்னல்வாடியை சேர்ந்தவர் ஆனந்தசுனா மகன் சவுமியரஞ்சன் சுனா, 19. கடந்த, 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. ஓசூர் மத்திகிரி அரசுபள்ளியில், பிளஸ் 1 சேர, அந்திவாடி சாலையிலுள்ள தனியார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தார். மாணவிக்கு அங்கு தங்க விருப்பமில்லை. கடந்த, 11ம் தேதி மதியம், 3:30 மணிக்கு, இல்லத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர் சுண்ணாம்பு ஜீபியை சேர்ந்தவர் மஞ்சுநாத் மனைவி கீதா, 38. தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு, நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கொங்கவேம்பு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 75. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 11ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சென்னியப்பன் நிலத்திலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பாக்கியம், 65, புகார்படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர் அருகே சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 25. கூலித்தொழிலாளி; கடந்த, 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் மது, 28, புகார்படி, நல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை