உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமி உட்பட 6 பேர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமி உட்பட 6 பேர் மாயம்

சூளகிரி: சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி அருகே துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ராமன், 27. இவரது மனைவி புஷ்பா, 25. இவர்க-ளுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 17ம் தேதி மாலை, 6:30 மணிக்கு தன் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற புஷ்பா திரும்பி வரவில்லை. கணவர் புகாரில், கோனேரிப்பள்ளியை சேர்ந்த பாபு மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஊத்தங்கரையை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கடந்த, 18 மாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப-வில்லை. அவரது தந்தை சிங்காரபேட்டை போலீசில் கொடுத்த புகாரில், மத்துார் அருகே வாலிபட்டியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் மணி, 24, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்-டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி ஜீவா, 25. இவர்களுக்கு, 7 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்-ளனர். குடும்ப பிரச்னையால் குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டையிலுள்ள தன் தாய் வீட்டில் ஜீவா வசித்தார். கடந்த, 16 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து இரு குழந்தைகளுடன் வெளியே சென்ற ஜீவா மாயமானார்.அவரது தாய் மஞ்சு, 41, சிங்காரபேட்டை போலீசில் கொடுத்த புகாரில், காரிமங்கலத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜன்டாக உள்ள ராயக்கோட்டையை சேர்ந்த விஜய், 30, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.100 நாள் வேலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை