மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம் 18 பேருக்கு பணி நியமனம்
21-Jun-2025
ஓசூர்: ஓசூரில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 602 பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார்வழங்கினார்.ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் துவக்கி வைத்து, 602 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மொத்தம், 59,374 வேலைநாடுனர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் உள்ளிட்ட இளைஞர்களின் நலனுக்காக, இந்த அரசு செயல்படுத்தி வரும் பல சீரிய திட்டங்களில் ஒன்று, வேலைவாய்ப்பு முகாம். இதில், பல முன்னணி நிறுவனங்களுடன், 114 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். இதில், 2,512 பேர் பதிவு செய்தனர். அவற்றில், 602 பேருக்கு, தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு ஆணை பெற்றவர்கள், பணியில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, மேலும் புதியதாக தொழில் நிறுவனங்களை துவங்கி, புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார, மாவட்ட திட்ட அலுவலர் பெரியசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரி சங்கர் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரநிதிகள், வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர்.
21-Jun-2025