7 நாட்டு துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், வனத்துறையினர் மூலம், 'ஒழிப்போம் நாட்டுத் துப்பாக்கியை, பாதுகாப்போம் யானைகளை' விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து பல பகுதிகளில் அந்தந்த பகுதியில், அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர், வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பர்கூரில், 6 நாட்டு துப்பாக்கிகள், கந்திகுப்பத்தில், ஒரு நாட்டு துப்பாக்கி என மொத்தம், 7 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறையினர் பர்கூர், கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.