70 சவரன் ரூ-.5 லட்சம் திருட்டு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; வேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தெய்வானை, 43; பாலேகுளி தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று, மாலை திரும்பினர். வீட்டின், 'கேட்' திறந்து, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 70 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் திருட்டு போனது. நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.