உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றம்

பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அடுத்த மோரமடுகை சேர்ந்-தவர் கிருஷ்ணமூர்த்தி, 37. இவரது மனைவி சூர்யா, 32. இவர்க-ளுக்கு கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்-தைகள் உள்ளனர். கடந்த, 6 மாதங்களுக்கு முன், சூர்யாவுக்கு வயிறு திடீரென பெரிதாக ஆரம்பித்தது. ஆனால் வலியோ, தொந்தரவோ இல்லை. நாளடைவில் வயிறு, அளவுக்கதிகமாக பெரிதானவுடன் சந்தேக மடைந்த சூர்யா, கடந்த சில வாரங்க-ளுக்கு முன், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்தார். ஸ்கேன் செய்ததில், அவரது வயிற்றில், பெரிய கருப்பை கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம், வயிற்றில் இருந்த, 8.69 கிலோ அளவுள்ள அக்கட்டியை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை