உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

அரூர் : அரூர் அடுத்த கைலாயபுரத்தை சேர்ந்த சிங்காரவேலன் மனைவி கண்மணி, 25. நேற்று காலை, 10:00 மணிக்கு கண்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்தில் கண்மணியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியில் தண்ணீர்பந்தல் அருகே பிரசவ வலி அதிகரித்தது. உடனடியாக ஆம்புலன்ஸ்சை டிரைவர் கார்த்திக் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சங்கர் பிரசவம் பார்த்ததில், கண்மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாய், சேய் இருவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நலமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை