உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்

ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அகர அக்ரஹாரம் கிராமத்திற்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக, உத்தனப்பள்ளி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார், இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில், உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை