மேலும் செய்திகள்
முகாமிட்ட 85 யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு
13-Nov-2024
ஓசூர்,:தேன்கனிக்கோட்டை அருகே, 20க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி வனச்சரக பகுதிகளில், 225க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.இவற்றில், 100க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் தவிர, 125க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து இடம் பெயர்ந்தவை. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள, 60க்கும் மேற்பட்ட யானைகளில், 20க்கும் மேற்பட்டவை குட்டிகளுடன் தனியாக பிரிந்து, திம்மசந்திரம் ஏரியில் ஆனந்த குளியல் போட்டன. நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றன.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஆலஹள்ளி, தாவரக்கரை, திம்மசந்திரம், நொகனுார், தின்னுார், மலசோனை, முள்பிளாட், சந்தனப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில், பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
13-Nov-2024