உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையை கடந்த ஒற்றை யானை

சாலையை கடந்த ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 5 யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், மாரசந்திரம், லக்கசந்திரம், மரகட்டா, நொகனுார், ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி, ஏணிமுச்சந்திரம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் காலை நேரங்களில் சுற்றித்திரிகின்றன. மரக்கட்டா கிராமம் அருகே அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையை நேற்று காலை கடந்த ஒற்றை யானை, நொகனுார் கிராமம் நோக்கி சென்றது.இதை பார்த்த அவ்வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் தங்களது மொபைல்போனில் யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். ஒற்றை யானையால் விவசாய பயிர்கள் சேதமாகி வருவதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி