உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்

புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், கவுண்டனுார் பஞ்., கமலாபுரம் கூட்ரோடு பகுதியில், கிருஷ்ணகிரி, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த, 2022 - 23ல், 13.59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொது நுாலக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த நுாலக கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இந்த நுாலகத்தின் முன் அப்பகுதியை சிலர், கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம், இந்த நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை