உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேப்பனஹள்ளியில் 3 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை யானை

வேப்பனஹள்ளியில் 3 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை யானை

வேப்பனஹள்ளியில் 3 நாட்களாகசுற்றித்திரியும் ஒற்றை யானைகிருஷ்ணகிரி, அக். 27-கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மகராஜகடை வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, 3 நாட்களுக்கு முன், ஆந்திரா மாநில வனப்பகுதி வழியாக, தமிழக எல்லை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், வனத்தையொட்டிய கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, எப்ரி, சிங்கிரிபள்ளி, நேர்லகிரி, கங்கமடுகு, பதிமடுகு, கட்டாயம்பேடு மற்றும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒற்றை யானை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால், இரவில், விவசாயிகள், பொதுமக்கள் யாரும் விவசாய நிலத்தில் தங்க வேண்டாம் எனவும், வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ