உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு மொபைல் மூலம் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி

விவசாயிகளுக்கு மொபைல் மூலம் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி

விவசாயிகளுக்கு மொபைல் மூலம்பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகிருஷ்ணகிரி, நவ. 24-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாயிகள் இரவு நேரம், மழை காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்லும்போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில், மொபைல் மூலம் பம்பு செட்டை கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளது.இதை பயன்படுத்தி, விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தபடியோ, வெளியூரில் இருந்தபடியோ மொபைல் மூலம் இயக்கவோ, நிறுத்தவோ முடியும். இதற்கு மானியமாக சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு மொத்த செலவில். 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.கிருஷ்ணகிரி விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் சந்திராவை, 94420 07040 எண்ணிலும், ஓசூர் விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் சிவக்குமாரை, 63838 15967 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !