உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி வைத்திருந்த ஆசிட், சோப்பு ஆயில் பறிமுதல்

அனுமதியின்றி வைத்திருந்த ஆசிட், சோப்பு ஆயில் பறிமுதல்

குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆயத்தீர்வை துறை மண்டல அதிகாரி சக்திவேல் மற்றும் அதிகாரிகள், பந்தாரப்பள்ளியில் உள்ள நடராஜ் என்பவரது நிலத்தில், நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அங்கு, உரிய பாதுகாப்பு இல்லாமல், 200 லிட்டர் கொண்ட, 12 பேரல்களில், ஹைட்ரோகுளோரிக் ஆசிட் மற்றும் 41 பேரல்களில் சோப்பு ஆயில், 29 பேரல்களில் காஸ்டிக் சோடா ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த, மண்டல அதிகாரி சக்திவேல், சட்டவிரோதமாக வைத்திருப்பதாக, குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி அருகே மேலுார் கிராமத்தை சேர்ந்த மாதப்பன், 45, மீது, குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை