மேலும் செய்திகள்
தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை
15-Jun-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 3ம் தேதி முதல் நேற்று வரை, 541 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், 541 கன அடி நீரும் நேற்று முன்தினம் வரை, தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரிக்காத போதும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும், 80 கன அடி அதிகரிக்கப்பட்டு, 621 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. ரசாயன நுரையுடன் கூடிய துர்நாற்றத்துடன் ஆற்றில் தண்ணீர் ஓடியது.
15-Jun-2025