உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லுாரியில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இக்கல்லுாரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் மற்றும் கணினி சார்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில், மூன்றாண்டு கால பட்டய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டிலும், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில், கணினி சார்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் பிரிவிலும் சேரலாம்.தகுதியுள்ள மாணவ, மாணவியர் அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வந்து, இக்கல்லுாரியில் சேரலாம். தொடர்புக்கு: 79045 31623, 96777 50567, 97906 20001, 94878 77123, 72004 22042, 95382 97646 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை