உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., தெற்கு பகுதி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., தெற்கு பகுதி நிர்வாகிகள் கூட்டம்

ஓசூர்: -கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தெற்கு பகுதி மாநகர அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திகிரியில் நடந்தது.தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். கூட்டத்தில், ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாநகர தெற்கு பகுதியில் ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலை சரி பார்ப்பது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட்ட செயலாளர்கள் கோபால ராமச்சந்திரன், பிரகாஷ், சுப்பிரமணி, திருநாவுக்கரசு, சிவா, ரஞ்சித், விஜி, நாகராஜ், நாராயணசாமி, அனுமந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிவாசராவ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை