உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனிதசங்கிலி போராட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனிதசங்கிலி போராட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்துஅ.தி.மு.க.,வினர் மனிதசங்கிலி போராட்டம்கிருஷ்ணகிரி, அக். 9-தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான தம்பிதுரை கலந்து கொண்டார். இதில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும், அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழகத்தில் போதை கலாசாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முதல் சார் பதிவாளர் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி போராட்டத்தை துவக்கி வைத்து கோஷம் எழுப்பினார். * கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் பர்கூரில் நடந்த போராட்டத்தில், நுரையீரல் பாதிப்புள்ள, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான பெருமாள் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசித்தபடி கலந்து கொண்டார்.* ஊத்தங்கரை ரவுண்டானாவில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். அதேபோல், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.* ஓசூரில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., கலந்து கொண்டார். * போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டியில், நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை