மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
07-Nov-2024
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட, வேலம்பட்டி சமுதாய கூட திருமண மண்டபத்தில் நேற்று, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்து, செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசுகையில், ''நாகோஜனஹள்ளி பேரூராட்சியிலுள்ள, 8 பூத்துகளில், 8,500 ஓட்டுக்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை விட, 1,000 ஓட்டுகள் குறைவாக பெற்றோம். அதனால், பர்கூர் தொகுதியை இழக்க நேர்ந்தது. இம்முறை ஒருவருக்கு ஒருவர் ஈகோ பார்க்காமல், ஒவ்வொரு பூத்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வின் சாதனைகளை எடுத்துக்கூறி, பர்கூர் தொகுதி வெற்றி பெற தேவையான ஓட்டுக்களை கூடுதலாக பெற, இப்பேரூராட்சி நிர்வாகிகள் களப்பணி செய்ய வேண்டும்,'' என்றார். கூட்டத்தில், எம்.எல்.ஏ., அசோக்குமார், முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன் மற்றும் பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, துாயமணி, வைரமணி உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
07-Nov-2024