உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு ஆடவர் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

அரசு ஆடவர் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், கடந்த, 2000-2003ம் ஆண்டில் படித்த முன்னாள் மாண-வர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கிருஷ்ணகிரியில் சந்திக்கும் நிகழ்வு நடந்தது. கல்லுாரி தாவரவியல் துறைத்தலைவர் ரவி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்கள் சந்திப்பின் நோக்கம் குறித்து ராஜா விளக்கினார். இதில், 2000-2003ம் கல்வியாண்டில் விடுதி சமையலர்களாக இருந்த குப்புசாமி, முனியப்பன், குருசாமி மற்றும் காவலர் சிவ-லிங்கத்தின் மகன் சிவமல்லையா ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கடந்த, 25 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்-வுகள், குடும்ப உறவுகள், தங்கள் பணியாற்றும் அனுபவம் ஆகி-யவற்றை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கர், தமிழரசன், வடிவேல், முருகன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி