மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனம் 12ம் தேதி ஏலம்
03-Sep-2025
ஓசூர் :கிருஷ்ணகிரி, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பொலிரோ வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனம், கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலக வளாகத்தில் வரும், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள், பிணை வைப்பு தொகையாக, 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஏலத்தை மாற்றவோ, ரத்து செய்யவோ ஏலக்குழு தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.ஏலம் எடுத்தவுடன், உரிய தொகையை அன்றே செலுத்தி விட வேண்டும். ஏலத்தொகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். பொது ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், அன்றைய தினமே, ஏல விலைப்புள்ளியை கோரலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
03-Sep-2025