தன்வந்திரி கோவிலில் வருடாபிஷேக விழா
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி அருகே உள்ள ஸ்ரீதன்வந்திரி கோவில் வருடாபிஷேக விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. தினமும் காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான ஸ்ரீதன்வந்திரி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. மேலும், பிரஷாத சுத்தி, உஷ பூஜை, முளை பூஜை, ஸ்ரீபூதபலி, நவகம் பூஜை, உச்சபூஜை, அத்தாழ பூஜை, விளக்காச்சாரம் போன்ற பல்வேறு பூஜை நடக்கின்றன. விழாவின் நிறைவு நாளான இன்று (டிச.14) மாலை, 5:00 மணிக்கு, பள்ளியுநர்த்தல், உஷபூஜை, யாத்ரா ஹோமம், ஆராத்து நடக்கிறது.ஏற்பாடுகளை, அதியமான் கல்வி குழும நிறுவனர் தம்பிதுரை எம்.பி., தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர்கள் லாசியா தம்பிதுரை, நம்ரதா தம்பிதுரை, தன்வந்திரி கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, பொறியாளர் சரவணன், மேலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.இந்நிலையில், ஓசூரில் இன்று நடக்கும் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் இசையமைப்பாளர் இளையராஜாவை, தன்வந்திரி கோவிலுக்கு வருமாறு, அறங்காவலர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.